Spotlightசினிமாதமிழ்நாடு

”ரஜினி அரசியலில் நல்லதை மட்டுமே செய்வார்”.. பிரபல நடிகை ஓபன் டாக்!

1980 களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர் சுமலதா. கழுகு, முரட்டுக்காளை, தீர்ப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுமலதா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளேன். தமிழ்நாட்டில் ரஜினிகாந்தை எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு அரசியல் பற்றி தெளிவான கருத்து உள்ளது. தெளிவாக புரிந்தும் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் அரசியல் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழல் மட்டும் வேறுமாதிரி இருக்கும்.

எனவே ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் ஈடுபட்டால் நன்றாக வருவார். சாதிக்கவும் செய்வார். நல்லதையும் செய்வார். கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார்.” இவ்வாறு சுமலதா கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button