ஓடிடி ப்ளஸ் என்ற இணையத்தில் வந்திருக்கும் குறும்படம் தான் இந்த “பெமினிஸ்ட்”. பிரபல எழுத்தாளரும் விமர்சகரும் இயக்குனருமான கேபிள் சங்கர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.
எழுத்தாளராக வருகிறார் அனு பரமி. இவருக்கும் நாயகனாக வரும் ராஜனுக்கும் முகநூல் நட்பு கிடைக்கிறது.
அனுபரமியின் எழுத்துகளுக்கு ராஜன் ரசிகனாக மாறுகிறார். ராஜனின் நையாண்டி கமெண்ட்ஸ்களுக்கு அனுபரமி ரசிகையாக மாறுகிறார்.
தொடர்ந்து இவர்களது பழக்கம் அதிகரிக்க, நேரில் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது தங்குவதற்கு இடமில்லை என்று அனுபரமி கூறியதும், தனது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுமாறு கூறி விடுகிறார் ராஜன்.
இருவரும் ஒரே வீட்டில் தங்க, இருவரும் லிவ்விங் வாழ்க்கை வாழத் துவங்குகின்றனர். ஒருகட்டத்தில், இருவருக்கும் வார்த்தைப் போர் வர, புரிதல் இல்லாமல் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
அதன்பிறகு இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்குறும்படத்தின் மீதிக் கதை.
ராஜனாக முத்தழகனும் அனுபரமியாக ஏஞ்சலின் ப்ளோராவும் நடித்திருக்கின்றனர். கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக இருவரும் மாறி நடித்திருக்கிறார்கள். வசனங்களை கூறும்போதும், உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமும் என பல இடங்களில் சின்ன சின்ன ரியாக்ஷன்களில் இருவரும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
சின்னதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை திறம்படவே கையாண்டிருக்கிறார். இருவருக்குமிடையேயான நெருக்கம் உருவாகும் இடமாக இருக்கட்டும், பிரியும் போது இருக்கும் காரணமாக இருக்கட்டும் என இரண்டிலும் திரைக்கதையை நன்றாகவே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
சமந்த் நாக் இசையில் பின்னணி இசை கதையோடு பயணப்பட்டது…
முரளி ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்…