Spotlightவிமர்சனங்கள்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம் 3.5/5

மாயவன் திரைப்படத்திற்கு பிறகு சி வி குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் தான் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.

படத்தின் நாயகியாக வரும் ப்ரியங்கா ரூத் (ஜெயா), இரு தங்கைகளுடன் அழகான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் அசோக்(இப்ராஹிம்) மீது காதலில் விழுகிறார் நாயகி.

இந்த விஷயம் ஜெயாவின் வீட்டிற்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஜெயா என்ற தன் பெயரை ரசியாவாக மாற்றிக் கொண்டு இப்ராஹிமை திருமணம் செய்து கொள்கிறார்.

மிகப்பெரிய தாதாவும், போதை பொருள் கடத்தல் மன்னனாக வரும் வேலு பிரபாகரனிடம் அக்கவுண்ட் செக்‌ஷனில் வேலைக்கு சேர்கிறார் அசோக். சில நாட்களிலேயே அசோக்கை போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுகின்றனர்.

தனது கணவனை இழந்து தவிக்கும் ரசியா, பழிவாங்கும் படலத்தில் இறங்க நினைக்கிறார். இதற்காக, பம்பாயில் ரெளடியான பாலாஜியிடம் சென்று தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். பின், சென்னை வரும் ரசியா, எதிரிகளை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

தனி ஒரு பெண்ணாக மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார் நாயகி ப்ரியங்கா ரூத். ஒவ்வொரு காட்சியிலும் அனுபவ நடிகையின் நடிப்பு தெரிகிறது. இப்படத்திற்காக அவரின் மெனக்கெடல், உழைப்பு எல்லாம் நன்றாகவே உணர முடிகிறது. அதற்கான தீர்வும் எட்டியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் மிரட்டி எடுத்திருக்கிறார். ரியல் ஆக்‌ஷன் காட்சிகளை கண்முன்னே நிறுத்திவிட்டார். கோலிவுட்டில் இவருக்கான ஒரு இடம் உருவாகி விட்டது. அந்நாள் நாயகி விஜயசாந்தியாக தற்போது தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார் ப்ரியங்கா ரூத்.

அளவெடுத்த நடிப்பாக தனது கேரக்டரை பெர்பெக்டாக செய்திருக்கிறார் அசோக். வழக்கம்போல், தனது ரோலை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் பாலாஜி. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பார்த்த அதே வில்லத்தனத்தை இப்படத்திலும் பாலாஜி கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.

இயக்குனர் வேலு பிரபாகரன், வில்லனாக நடித்து அனைவரையும் உறைய வைக்கிறார். முதல் காட்சியிலேயே தனது கேரக்டருக்கு உயிர் கொடுத்து அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் கைகளில் கேமரா விளையாடியிருக்கிறது. படத்தில் முதல் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவும், இரண்டாம் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவையும் கொடுத்து நம்மை காட்சியில் கட்டிப் போட்டுவிட்டார் ஒளிப்பதிவாளர். கோலிவுட்டில் தனக்கென ஒரு முத்திரையை நிச்சயம் பதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இசையமைப்பாளர் ஹரி டபியூசியாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் ‘ஆகாயம் சுடுதே’ ரிப்பீட் மோட். சந்தோஷ் நாராயணி உதவியோடு நடைபோடும் பின்னனி இசை, கதையின் நகர்வோடு இணைகிறது.

’மெட்ராஸ்’ பற்றி தமிழ் சினிமாவில் பல படங்கள் ரத்தம் தெறிக்க வந்தாலும், இந்த வகையான ரத்தம் புது வகையாகதான் இருக்கிறது. காட்சிமைப்பு மட்டுமல்லாமல், யூகிக்க முடியாத கதையையும் திருப்பத்தையும் கொடுத்த இயக்குனர் சி வி குமாரை நிச்சயம் பாராட்டலாம்.

முக்கிய குறிப்பு: 18 – வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – தரமான சம்பவம்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker