குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இதனிடையே டிஜிபி அலுவலகத்தில் தற்போது ரெய்டு துவங்கியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.
Facebook Comments