
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி , வினய், சாய்குமார், அனன்யா, விவேக் பிரசன்னா , தங்கதுரை, KPY தீனா உள்ளிட்ட நட்ச த்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “டீசல்”.
திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எம் எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று ஸ்பெஷல் வீடியோ ஒன்றை டீசல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் சிறந்த ஒளிப்பதிவு, மேக்கிங், மற்றும் மிரட்டலான பின்னணி இசை என பின்புலம் கொண்டு மாஸாக எண்ட்ரீ கொடுத்தார் ஹரீஷ் கல்யாண்.
இந்த க்ளிம்ப்ஸ் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
Facebook Comments