Spotlightசினிமா

மிரட்டலுக்கு தயாராகும் அருண் விஜய்யின் “சினம்”!!

 

Movie slides சார்பில் ஆர் விஜய் குமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் ” சினம்”.

இப்படத்தினை GNR குமரவேல் இயக்கியிருக்கிறார். குற்றம் 23 படத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி அசத்திய அருண் விஜய், இப்படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், வசூல் மழையிலும் நனைந்தது இப்படம்.

அப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக சினம் படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

குடும்பங்கள் ரசிக்கும் படியான படத்தினை தொடர்ந்து கொடுத்து வரும் அருண் விஜய், இப்படமும் அப்படியாகவே உருவாகியிருக்கிறது என்கிறார்கள் படக்குழுவினர்.

வரும் 16 ஆம் தேதி இப்படம் திரை விருந்து தரவிருக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close