
மதயானை கூட்டம் படத்தின் இயக்குனரான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தணு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “இராவண கோட்டம்”.
வரும் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தினை பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படமே இவரின் முதல் படைப்பாகும்.
தமிழ் சினிமாவில் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் தான் மதயானைக் கூட்டம். இப்படத்தின் இயக்குனரின் இரண்டாவது படைப்பாக உருவாகியிருக்கும் இராவண கோட்டம் திரைப்படம் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக பார்க்கப்படுகிறது.
நடிகர் ஷாந்தணு படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதை விட, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது, மண்ணின் நாயகனாகவும், இராமநாடு பகுதியில் அங்கேயே வாழ்ந்த ஒரு இளைஞனை போலவும் உடல்மொழியிலும் தனது வெட்கை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறந்த நட்சத்திரமான ஷாந்தணுவிற்கு தமிழ் சினிமாவில் இன்னும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பலராலும் கருதப்படுகிறது. இராவண கோட்டம் திரைப்படம் ஷாந்தணுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
ஷாந்தணுவின் தமிழ் சினிமாவை இராவண கோட்டத்திற்கு முன் இராவண கோட்டத்திற்கு பின் என்று பிரித்து பார்க்கவேண்டிய சூழல் நிச்சயம் அவர் வாழ்வில் அமையும், அப்படியான படமாக இப்படம் அமையும் என்றும் கூறுகிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.