Spotlightதமிழ்நாடு

தரமான கோலிசோடா: விருதை தட்டிச் சென்ற “V சோடா” நிறுவனம்!

IB Think நிறுவனத்தின் மூலமாக வருடந்தோறும் வணிகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024ஆம் ஆண்டிற்கான விருதுகள் சில தினங்களுக்கு முன் IB Think நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

அதில், இந்த வருடத்தின் சிறந்த கோலி சோடா உற்பத்தியாளர் விருதினை “V சோடா” நிறுவனம் தட்டிச் சென்றது.

உற்பத்தியில் தரம், வணிகத்தில் முதலிடம் என பல காரணங்களுக்காக V சோடா நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை IB Think நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வழங்க V சோடாநிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ்வரன் மோகன் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

விருதினை பெற்றுக் கொண்ட V சோடா நிறுவனர் விக்னேஷ்வரன் மோகன் பேசுகையில், “ தமிழகத்தில் நம்பர் ஒன் கோலிசோடாவாக V சோடா தேர்ந்தெடுத்ததற்கு முதலில் IB Think நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதினை வருடந்தோரும் தக்க வைத்துக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது மட்டுமே என் மனதுக்குள் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

எதையும் அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது.. அதிலும் வெற்றியை நிச்சயமாக எளிதாக அடைய முடியாது. ஒரு முடிவெடுங்கள்.. அதற்காக கடுமையாக உழையுங்கள்… அந்த உழைப்பு அதற்கான அங்கீகாரத்தை நிச்சயம் உங்களுக்கு கொடுக்காமல் செல்லாது..

அடுத்த வருஷமும் இந்த விருதை நானே பெறுவதற்கு இன்னமும் கடினமாக உழைப்பேன். வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.” என்று கூறினார்.

வி சோடா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இதன் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 வகையான பானங்கள் இந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் Food Safety Standards Authority of India (FSSAI) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது V சோடா நிறுவனம்.

தரம் ஒன்றே இந்நிறுவனத்தின் நிரந்தரம் என்ற நோக்கில் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக விக்னேஷ்வரன் மோகன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button