
இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங், சந்தீப் கோயட், மனிஷ் ஜான் ஜோலியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இன் கார். பாலியல் தொடர்பான படங்களின் வரிசையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
கதைப்படி,
கல்லூரி முடித்து பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ரித்திகா சிங்கை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் கடத்திச் செல்கிறது. அந்த மூவரில் ஒருவன் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறான்.
அந்த மூவரிடமும் சிக்கிக் கொண்டு இன்னல்களுக்கு உள்ளாகிறார் ரித்திகா சிங். காம வெறி பிடித்த அந்த கும்பலிடம் இருந்து ரித்திகா சிங் தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
இறுதிச்சுற்று படத்தின் மூலக்கதை இவரை சுற்றி நடப்பது போன்று, இப்படமும் முழுக்க முழுக்க இவரை சுற்றியே நடக்கிறது. முழு படமும் காருக்குள்ளே நடந்து கொண்டிருக்கிறது.
மோசமான திரைக்கதையால் படம் சுக்குநூறாக போனதுதான் மிச்சம். படம் ஆரம்பித்து 5வது நிமிடத்திலேயே காரில் ஆரம்பிக்கும் கதையானது, க்ளைமாக்ஸ் எட்டும் வரை காருக்குள்ளேயே நடக்கிறது.
அதிலும், அவர்கள் பேசும் வசனங்கள் ஒரு இடத்தில் கூட படத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கவில்லை. கஷ்டபடுத்துகிறார்கள் என்று கூறிய பின்பும் தொடர்ந்து அதைக் காட்டிக் கொண்டே இருப்பது எரிச்சலடைய வைக்கிறது.
இப்படம் பல மொழிகளில் வேறு டப்பிங்க் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியில் மட்டுமே ஒரிஜினலாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும், நடிப்பும் துளி அளவும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒளிப்பதிவு சற்று ஆறுதல் கொடுத்தாலும், பின்னணி இசை எதற்கு இதெல்லாம் என்று தான் கேட்க தோன்றுகிறது.
படத்திற்குச் சென்று டிக்கெட் பணத்தை வீணடிப்பதை விடுத்து வீட்டிலேயே இருப்பது நல்லது என்று சமூக நலன் கருதி கூறிக் கொண்டு நமது விமர்சனத்தை இத்தோடு நிறைவு செய்கிறோம்.
இன் கார் – செம ஃபோர்….