Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு…. இந்தியாவின் முயற்சி வெற்றி!

லகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.

இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகிலேயே தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக இந்தியா மாறும்.

Facebook Comments

Related Articles

Back to top button