
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதி பாலிமர் நியூஸ் செய்தியாளர் முத்துவேல் மீது நேற்றிரவு ரவுடிகள், அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால், படுகாயம் அடைந்த முத்துவேல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் கஜேந்திரன் மீது, பெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
கந்துவட்டிக்கு கடன் கொடுத்து, பின் தன் அதிகார பலத்தால் அனைவரிடமும் மிரட்டி வட்டி பணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தி சேகரித்தார் பாலிமர் டி வி செய்தியாளர் முத்துவேல். இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கூலிப்படை ரவுடி சண்முகநாதன் என்பவரை ஏவி விட்டு முத்துவேலை சரமாரியாக அரிவாளை கொண்டு தாக்க வைத்துள்ளார்.’ என்று முத்துவேல் கஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார்..
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




