
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ”இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு”.
விமல் கதாநாயகனாக நடிக்கிறார்… நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும்.
ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – நடராஜன் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை – வைரபாலன்
படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.
படத்தினை பற்றி இயக்குனர் ஏ ஆர் முகேஷ் கூறும்போது, ‘வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல் சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள்.
ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த,வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த. தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த. ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்.” என்றார் இயக்குனர்.