Spotlightசினிமா

ஒரு கோடி நிமிடங்கள்… ஆஹா ஓடிடி’யில் அதிவேக சாதனை நிகழ்த்திய “மாமனிதன்”!

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “மாமனிதன்”.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர்.

படம் திரையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படம் அனைத்து மக்களையும் எளிதாக சென்றடையும் வகையில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆஹா ஓடிடி’யில் வெளியான நாள்முதல், இன்று வரை சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு அநேக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஹா ஓடிடி’யில் மாமனிதன் திரைப்படம் அதிவேகமாக 1 கோடி நிமிடங்கள் மக்களால் பார்க்கப்பட்ட படமாக சாதனை படைத்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button