Spotlightவிமர்சனங்கள்

காந்தா – விமர்சனம் 4.5/5

Written & Directed – Selvamani Selvaraj
Produced – Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, Jom Varghese
Production House – Spirit Media, Wayfarer Films
DOP – Dani Sanchez Lopez
Editor – Llewellyn Anthony Gonsalvez
Art Director – Ramalingam
Music – Jhanu Chanthar
PRO – Suresh Chandra/Abdul Nasser

CAST: Dulquer Salmaan, Samuthrakani, Rana Daggubati, Bhagyashri Borse, Ravindra Vijay, Aadukalam Naren, Vaiyapuri, Gayathri Shankar, Brijesh Nagesh, Bucks, Barathan, Nizhalgal Ravi, Java Sunderasan and others

கதைப்படி,

கருப்பு – வெள்ளை காலகட்டத்தில் மார்டன் சினிமா என்ற படப்பிடிப்பு தளம் ஒன்று இருக்கிறது. அது மூடுவிழா தருணத்திற்கு வர, அதனை மீட்டெடுக்க பாதியில் நின்று போன “சாந்தா” என்ற படத்தினை எடுத்து முடிப்பது தான் என்று நினைக்கிறார் தயாரிப்பாளர் ரவிந்திர விஜய்.

அதற்காக இயக்குனர் கோதண்டராமனை (சமுத்திரக்கனி) அழைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். க்ளைமாக்ஸில் மட்டும் ஹீரோ சாவது போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சாந்தா படத்தின் நாயகன் டி கே மகாதேவன் (துல்கர் சல்மான்) விரும்புவதாக ரவிந்தர் விஜய் கூற, அதெல்லாம் முடியாது இது என் கதை, அதன் க்ளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் கோதண்டராமன்.

கிராமத்தில் கூத்து கட்டி ஆடிக் கொண்டிருந்த மகாதேவனை, சென்னை அழைத்து வந்து சினிமாவைக் கற்றுக் கொடுத்து நடிப்புப் பயிற்சியும் கொடுத்து சினிமாவில் ஹீரோவாக ஆக்கி விடுகிறார் இயக்குனரான கோதண்டராமன்.

முதல் படமே ப்ளாக் பஸ்டர் படமாக மாற, அடுத்த இயக்குனர்களின் படங்களில் நடித்து மிகப்பெரும் நட்சத்திரமாக உருவெடுக்கிறார் மகாதேவன். சில வருடங்கள் கழித்து, மீண்டும் சாந்தா என்ற படத்தை இயக்கவிருப்பதாக கூறி, மகாதேவனை அழைக்கிறார் கோதண்டராமன்.

படம் துவங்குகிறது. தனக்கென மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதாகவும், அதனால், க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ இறக்கும்படியான காட்சியை நீக்குமாறு கூறுகிறார் மகாதேவன். அதனை ஏற்க மறுத்து இருவருக்குள்ளும் மிகப்பெரும் சண்டை ஏற்பட, இறுதியில் சாந்தா திரைப்படம் பாதியில் நின்று போகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் டி கே மகாதேவன். இது என் படம், இதற்கு க்ளைமாக்ஸ் நான் தான் முடிவு செய்வேன் என்று படத்தினை தனக்கேற்றவாறு இயக்குகிறார் மகாதேவன்.

கோதண்டராமனுக்கு மேலும் கோபம் கொப்பளிக்கிறது. படத்தினை தனக்கேற்றவாறு எடுத்து முடிக்க திட்டமிட்ட கோதண்டராமன், படத்தின் கதாநாயகியான ராஜகுமாரியை (பாக்யஸ்ரீ போர்ஸ்) அழைத்து மகாதேவன் சொல்வதை கேட்காமல், தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார் கோதண்டராமன்.

இருவருக்குள்ளும் ஈகோ உச்சத்தில் நிற்க, பகைடைக்காயாக அல்லாடுகிறார் ராஜகுமாரி. இந்நிலையில் மகாதேவனும் ராஜகுமாரியும் நெருங்கி பழக ஆரம்பிக்கும் நேரத்தில், அந்த படப்பிடிப்பு அரங்கிற்குள் இரவு நேரத்தில் ஒரு கொலை நடக்கிறது.

கொல்லப்பட்டவர் யார்.? யார் அந்த கொலையை செய்தார்.?? எதற்காக அந்த கொலை நடத்தப்பட்டது.??? மகாதேவனுக்கும் கோதண்டராமனுக்கும் இருந்த ஈகோ எதுவரை நீண்டது.???? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.

இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரமான டிகே மகாதேவனை அனைவரும் நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைப்பனர். படம் பார்த்து வெளிவந்த பிறகு அனைவரும் கூறும் ஒரே வார்த்தை துல்கர் சல்மான் தான் நடிப்பு சக்கரவர்த்தி என்று.

என்ன ஒரு நடிப்பு என படம் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு மகாதேவனாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் துல்கர் சல்மான். இந்த படத்தில் இவரை ரசிப்பதற்கு காரணம், இதற்கு முன் தமிழ் ரசிகர்களை வெகுவாக அவர் கவர்ந்து வைத்திருந்தாலோ என்னவோ படம் ஆரம்பிக்கும் போதே, எளிதாக கதாபாத்திரத்தை நம்மிடையே கடத்திவிட்டார் துல்கர்.

நான்கு ஸ்டெப்பில் கதாபாத்திரத்தின் நடிப்பை சமுத்திரக்கனி சொல்லி முடித்ததும், அதனை உள்வாங்கிக் கொண்டு தனது நடிப்பு அரக்கனை வெளிக்கொண்டுவந்து அந்த இடத்தில் நிலைநிறுத்தி படம் பார்த்த அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் துல்கர் சல்மான்.

இப்படியொரு நடிப்பை எங்கப்பா வச்சிருந்த இவ்ளோநாளா என கேட்கும் அளவிற்கு மிரட்டலான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார் துல்கர் சல்மான். காட்சிப்பதிவு அனைத்துமே டைட் ப்ரேமில் எடுக்கப்பட்டதால், முகத்தில் மட்டுமே தனது நடிப்பைக் கொடுத்திருந்தார் துல்கர் சல்மான்.

நவரச நடிப்பையும் தனது முகத்தில் கொண்டு வந்து, மிரள வைத்துவிட்டார் துல்கர் சல்மான். நடிப்பு பயிற்சி பட்டறை அல்லது கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுப்பவர்கள் இப்படத்தை பார்த்தால் நடிப்பு என்பது என்ன என்பதை துல்கரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவர் தான் இப்படி நடிக்கிறார் என்று பார்த்தால், சமுத்திரக்கனியும் தனது கேரக்டரை மிகவும் செட்டிலாக செய்து முடித்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரையிலும் தனது கோதண்டராமன் கேரக்டரை எந்த இடத்திலும் நழுவ விடாமல் அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மிக நீளமான வசனம் கொண்ட காட்சியைக் கூட மிக எளிதாக தூக்கி சாப்பிட்டுவிட்டு சென்று விட்டார் சமுத்திரக்கனி. க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை வருடும் ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

தனது கண்களாலும் நடிப்பாலும் படம் பார்ப்பவர்களை கண் இமைக்காமல் கட்டிப் போட்டுச் சென்றிருக்கிறார் ராஜகுமாரியாக வாழ்ந்த பாக்யஸ்ரீ போர்ஸை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். துல்கர் சல்மானோடு இணைந்து வரும் காட்சிகளிலெல்லாம் காதலை அனைவருக்கும் கடத்தி நம்மையும் காதலிக்க வைத்துவிட்டார் பாக்யஸ்ரீ. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் எதிர்காலம் பாக்யஸ்ரீக்கு இப்படத்தின் மூலம் ஏற்படும்.

இரண்டாம் பாதியில் அதிரடியாக வந்து கலக்கிச் சென்றிருக்கிறார் ராணா டகுபதி. கொலையை விசாரிக்கும் முறை, தோரணை, அனைத்தும் ரசிகர்களை நிச்சயம் கவரும். அப்படியான நடிப்பைக் கொடுத்துவிட்டார் ராணா.

மேலும், படத்தில் நடித்த ரவீந்திர விஜய், வையாபுரி, பக்ஸ், ஆடுகளம் நரேன், காயத்ரி சங்கர், நிழல்கள் ரவி, பிரிஜேஸ் நாகேஷ் என படத்தில் நடித்த அனைவருமே வியக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டுச் சென்றனர்.

யாரும் தொடாத, தொட அச்சம் கொள்ளும் ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதில் தனது பங்களிப்பை எப்படி கொடுக்க இயலுமோ அதனை சரியாக கொடுத்து படம் முழுவதுமே ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.

படத்தின் வசனம் ஒவ்வொன்றும் படத்தின் ஓட்டத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது. துல்கர் சல்மானும் சமுத்திரக்கனியும் ஒரு அறையில் பேசிக் கொள்ளும் காட்சியில் துல்கர் சல்மான் பேசிய வசனங்களும் அவரது நடிப்பும் மிரள வைத்துவிட்டது.

ப்ப்ப்ப்பாஆஆஆஆ…. என்னவொரு மேக்கிங்க், என்னவொரு சிந்தனை, என்னவொரு கதைக்களம், என்னவொரு வசனம், என்னவொரு உழைப்பு என இயக்குனரை கட்டித் தழுவி வாழ்த்துகளை கூறிக் கொள்ளலாம் அப்படியான ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு அல்ல உலக சினிமாவிற்கு படைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜானு சந்தரின் இசையில் பாடல்கல் காதுகளுக்கு அவ்வளவு ஒரு இனிமையை கொடுத்தது. மனதை உருக வைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பில்லராக இருந்திருக்கிறது.

Dani Sanchez Lopez அவர்களின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு அழகு.. நடிப்பை அப்படியொரு தத்ரூபமாக நம்மிடையே கடத்துவதற்கு மிகப்பெரும் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது ஒளிப்பதிவு தான். வெளிச்சத்தை அவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ராமலிங்கம் அவர்களின் கலை இயக்கமும் பெரிதும் கவனம் ஈர்த்தது.

இந்த வருடத்தின் சிறந்த படைப்பில் உச்சமாக நின்றுவிட்டது இந்த “காந்தா”

காந்தா – இது தான் “சினிமா”

Facebook Comments

Related Articles

Back to top button