Spotlightசினிமா

பாசமலர் பாணியில் வரும் “காத்தாடி மனசு”!

அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். பாசமலர், கிழக்கு சீமையிலே வரிசையில் அண்ணன், தங்கை உறவின் பாசப் பிணைப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் படம் காத்தாடி மனசு. அண்ணனாக தம்பி ராமையா, தங்கையாக சுஜாதா இந்தப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

தம்பி ராமையா மகளுக்கும், சுஜாதா மகனுக்கும் ஏற்படும் காதல், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கிராமத்து காவியம் “காத்தாடி மனசு”.

மெளரியா, விஜய்லோகேஷ், யுகா, அனிகா, தம்பிராமையா, கஞ்சா கருப்பு, யுவராணி, கோலிசோடா சுஜாதா, கானாபாலா, சித்ரா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்.எஸ்.மாதவன்.

Facebook Comments

Related Articles

Back to top button