Spotlightவிமர்சனங்கள்

காயல் – விமர்சனம் 3/5

யக்கம்: தமயந்தி

நடிகர்கள்: கபாலி லிங்கேஷ், காயத்ரி சங்கர், அனுமோல், ஐசக் வர்கீஸ், ரமேஷ் திலக், ஸ்வகதா கிருஷ்ணா

ஒளிப்பதிவு: கார்த்திக் சுப்ரமணியம்

இசை: ஜஸ்டீன் கெனன்யா

படத்தொகுப்பு: ப்ரவீன் பாஸ்கர்

தயாரிப்பு: ஜேசு சுந்தரமாறன்

கதைப்படி,

ஐசக் வர்கீஸ் மற்றும் அனு மோல் இவர்களுக்கு மகளாக வரும் காயத்ரி சங்கர், படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கணவன் வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக தகவல் வருகிறது.

இதனைக் கேட்டதும் அலறி அடித்துக் கொண்டு அங்கு செல்லும் ஐசக்கும் அனு மோலும் தனது மகளின் பிணத்தைப் பார்த்து கதறி அழுகின்றனர்.

கதை, ப்ளாஷ் பேக் செல்ல தனது தந்தை மீதும் தனது தாய் மீதும் காயத்ரி அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்.

காயத்ரியும் லிங்கேஷும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். காயத்ரி மீது வைத்திருக்கும் பாசத்தால் காயத்ரியின் காதலுக்கு எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உடனே சம்மதம் தெரிவிக்கிறார் தந்தை ஐசக் வர்கீஸ்.

அவர் ஜாதியை காரணம் காட்டி, லிங்கேஷை ஏற்க மறுக்கிறார் தாய் அனு மோல். இதனைத் தொடர்ந்து வழுக்கட்டாயமாக தனது அண்ணன் மகனுக்கு காயத்ரியை மணமுடித்து வைத்து விடுகிறார் அனுமோல்.

காயத்ரியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா.? காயத்ரியின் மறைவிற்கு பின்னர் ஐசக் மற்றும் அனுமோல் இருவரும் என்ன நிலைக்குச் சென்றனர்.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களும் மிக அழகாகவே பொருந்தியிருக்கின்றனர். ஒரு கவிதையாக படத்தின் காட்சிகள் நகர்வது படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே பார்க்கலாம்..

அநேக படங்களில் வில்லனாக பார்த்திருந்த ஐசக் அவர்களை, இப்படத்தில் ஒரு நல்ல மனிதராக பார்க்கும் போது அழகாக தெரிகிறார்.

அனுமோலின் நடிப்பை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஸ்கிரீனில் வந்து நின்றாலே, அக்கதாபாத்திரத்தை அப்படியே தூக்கிச் சென்று நிறுத்திவிடும் நடிப்பைக் கொடுத்துவிடுகிறார்.

ரமேஷ் திலக்கின் அளவான நடிப்பு பேச வைக்கிறது. ஸ்வகதா கிருஷ்ணாவின் கண்கள் பேசுகிறது.

ஆர்ப்பரிக்கும் காட்சிகள் எதுவுமின்றி, கணவன் & மனைவிக்கிடையே இருக்கும் காதல், தந்தை & மகளுக்கு இடையே இருக்கும் பாசம், தாய் & மகளுக்கு இடையே இருக்கும் அன்பு என அனைத்தையும் ஒரு சில காட்சிகளில் மிக அழுத்தமாக பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஒரு மார்டன் விட்டில், ஒரு மார்டன் குடும்பத்தில் சாதியானது எப்படியான ஒரு இழப்பை ஏற்படுத்தும் என்பதை மிக அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

க்ளைமாக்ஸ் காட்சியானது படம்பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. அதிலும், ஜஸ்டீனின் இசையில் பாடல்கள் நம்மை மேலும் கலங்கடித்துவிடுகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் காதுகளுக்கு இனிமை தான். பின்னணி இசையும் கதையோடு சேர்ந்து நம்மை நகர வைக்கிறது.

ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து தான். பிச்சாவரம் பகுதியை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு சாதியப் பார்வை ஒரு குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைத்திருக்கிறது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கும் படைப்பு தான் இந்த காயல்…

காயல் – காயம்..

Facebook Comments

Related Articles

Back to top button