விமர்சனங்கள்

கலகலப்பு 2 – விமர்சனம் (3/5 ) ஆடம்பர சிரிப்பு வெடி

சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும்  ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய்.
இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய்.
இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய  சிவா, தற்போது பொள்ளாச்சியில் மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக
செல்வதை அறிந்த இருவரும் அவனை பிடிக்க பொள்ளாச்சி செல்கின்றனர். இறுதியாக அங்கு யார்யார்க்கு என்ன நடந்தது என்பதை சுந்தர் சி பாணியில் மிகவும் கலகலப்போடு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி .
ஜெய், ஜீவா, சிவா மூவரும் காமெடி, பைட், காதல் என சரிசரமான கேரக்டரை கொடுத்து தராசை சமன் படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. கவர்ச்சியில் நடிப்பை அள்ளி தெளித்திருக்கிறார்கள் நிக்கி கல்ராணியும் கேத்ரின் தெரசாவும்… படத்தை இவர்கள் தான் செம கலர் புல் ஆக்குகிறார்கள்.
சாமியார் கெட்டப்பில் வந்து கிடைக்கும் கேப்பில் கலாய்த்து செல்லும் யோகிபாபுவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சாமியாராக மாறத்துடிக்கும் சதீஷ் தீட்சை பெறும் காட்சி செம கலாட்டடா.
ஜார்ஜின் அம்மாவாசை அதிரடி குபீர் சிரிப்பு ரகம். ராதாரவியை கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். முனீஸ்காந்த்தின் வித்தியாசமான வியாதி கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிராமத்து எபிசோடில் ரோபோ சங்கர் கலகப்பூட்டுகிறார்..
ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல.. காசியின் அழகை செந்தில்குமார் மிக அழகாக காட்டியிருக்கிறார். வழக்கமான சுந்தர் சி படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் கொஞ்சம் இப்படத்தின் ரகம் சற்று குறைவு தான்.
கலகலப்பு 2 – கலகலப்பிற்கு பஞ்சமில்லை
Facebook Comments

Related Articles

Back to top button