
2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் ஆன படம் தான் ‘களவாணி 2’.
சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்து ‘களவாணி 2’ படத்தை உருவாக்கியுள்ளது.
வழக்கம்போல், அம்மா சரண்யா மோகனுக்கு செல்லப்பிள்ளையாகவும், அப்பா இளவரசுக்கு வேண்டா விருப்ப பிள்ளையாக வருகிறார் நமது நாயகன் விமல்.
வெள்ளை வேஷ்டி – சட்டை கலையாமல் தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, அவ்வப்போது அலப்பறையை கொடுக்கும் உள்ளூர் வெட்டி நாயகன் தான் அரிக்கி(விமல்).
மகளிர் மன்ற குழு தலைவியாக வருகிறார் ஓவியா. இவரது தந்தை ராஜ் மோகன் குமர் அந்த ஊரின் பஞ்சயாத்து தலைவர். தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விமலின் மாமனாக வரும் துரை சுதாகரை நிற்க வைக்கின்றனர்.
ஓவியாவின் தந்தை ராஜ் மோகன் குமாருக்கும் விமலின் மாமனாக வரும் துரை சுதாகருக்கும் தான் போட்டி என்ற சூழல் வரும் போது, விமலும் களத்தில் குதிக்கிறார்.
என்னவெல்லாம் களவாணித்தனம் செய்து பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது படத்தின் மீதிக் கதை…
களவாணி முதல் பாகத்தில் கொடுத்த நடிப்பை இரண்டாம் பாகத்திலும் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறார் விமல். வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக இருந்து ஊரில் ஊதாரித்தனமாக சுற்றி வரும் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
நாயகி ஓவியா, அழகாக இருக்கிறார். ஒடாரம் பண்ணாத பாடல் ஓவியாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து எடுத்து நடித்தால் ஓவியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுறுவார்கள்.(நானும் தான்)
வழக்கம்போல், இப்படியொரு அம்மாதான் எனது அம்மாவும் இப்படியொரு அப்பாதான் எனது அப்பாவும் என ஏங்க வைக்கும் கதாபாத்திரம் தான் சரண்யா பொன்வண்ணனுக்கும் இளவரசனுக்கும்.
எதார்த்த நடிப்பில் அனைவரையும் இந்த ஜோடிகள் ஈர்த்துவிட்டனர். இடைவெளிக்கு முன்பு காமெடிக்கென்று அவ்வளவு இடங்கள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் விட்டது கொஞ்சம் சறுக்கலாக இருந்தது. அதற்கு ஆர் ஜே விக்னேஷ்காந்த் கதைக்குள் ஒட்டாமல் பயனித்தது தான் காரணம்.
கஞ்சா கருப்பு தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேகமெடுத்து படம் பயணித்து அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டது.
மணி அமுதவனின் இசையில் ஒட்டாரம் பண்ணாத பாடல் ரிப்பீட் மோட்…
ரோனல்ட் ரீகனின் ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் பாடல்..
நடராஜனின் பின்னனி இசை கிராமத்து கதையோடு பயணம்
ஒட்டாரம் பண்ணாத பாடலிலே தெரிந்து கொள்ளலாம் மசாணியின் ஒளிப்பதிவு – அருமை
இன்னும் களவாணி 3, 4, 5 பாகங்களை கூட சற்குணம் இயக்கலாம்… அதை ரசிக்கும் ரசிகர்கள் இன்னும் அதிகமாகதான் ஆவார்கள்..
களவாணி 2- கலகல களவாணி….