
“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்” என்று பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும் ,இயக்குனர் மாரி செல்வராஜையும் நடிகர் கமல் வாழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று படம் பார்த்த கமலஹாசன், “தனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
Facebook Comments





