
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய கமலஹாசன் தனது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் காவிரி பிரச்சனைக்காக கமலஹாசன் தனது தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் கமல். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுக்கும் கமல் போனில் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தமிழிசை செளந்தர்ராஜன், விஷால் ஆகியோருக்கும் கமல் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments