நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சுமார் 3.94% சதவீத வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய கமல்,
”பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் “ஏ” டீம் – எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி.
மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.
தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் .
தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு” என்று கூறினார்..
தமிழகத்தில் தலைவர்கள் மறைந்ததால், வெற்றிடம் உருவாகியுள்ளதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப தான் வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.