
விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெளியாகும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசனை எட்டியுள்ளது.
இந்நிகழ்ச்சி பரவலாக கோடிக்கணக்கில் ரசிகர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள குக் மற்றும் கோமாளிகளுக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் குக்’காக வருபவர் கனி. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் புகழை எனக்கு தெரியும். சிறு வயதில் இருந்தே ஆண்களுடன் அவ்வளவாக நட்பு இருந்தது இல்லை. முதல் முறையாக நண்பன் நண்பன் என்று பழகியவர் புகழ் மட்டும் தான். நான் கொஞ்சம் மைண்ட் அப்செட்டில் இருக்கும் போது எனக்கு ஆறுதலாக இருப்பதும் புகழ் தான்.
எனக்கு ஒரு நல்ல நண்பன் என்று யாருமே இருந்தது கிடையாது. முதல் முறையாக புகழ் மட்டும் தான் கிடைத்துள்ளார். பாலா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச தம்பி.’ என்று கூறியுள்ளார்.





