
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி,சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”விருமன்”.
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நேற்று விழா முடிந்ததும், மதுரையிலேயே தங்கிய கார்த்தி, இன்று அதிகாலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
விருமன் படம் ஹிட் அடிக்க தரிசனத்தை செய்துள்ளார் நடிகர் கார்த்தி. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
.இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்தி அண்ணன் அவர்கள் தரிசனம்
#VirumanTrailer 💥 #Karthi@Karthi_Offl 💥🎇🧨 @prabhu_sr @dir_muthaiya@AditiShankarofl @Suriya_offl @rajsekarpandian @thisisysr #Karthi24 #Viruman #PonniyinSelvan #PS1 #Kaithi2 #Suriya pic.twitter.com/eX1CRejydv— ꧁♥︎ Pavithran Rm ♥︎꧂ (@PavithranRm) August 4, 2022