Spotlightசினிமா

தரமான ‘யூ’ சான்றிதழுடன் அடுத்த மாதம் வெளிவருகிறது ‘ஹவுஸ் ஓனர்’!

க்ஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ’ஹவுஸ் ஓனர்’.

மனித உறவுகள் மற்றும் ஒரு அழகான காதல் கதையை பற்றிய படமாக உருவாகியுள்ளது இந்த “ஹவுஸ் ஓனர்”.

பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் சென்சார் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. குடும்பம் சகிதமாக அனைவரும் பார்க்கும் படியான ’யூ’ சான்றிதழ் இப்படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த மாதம் படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button