Spotlightசினிமா

KT குஞ்சுமோன் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் RRR பட இசையமைப்பாளர்!!

ல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். இந்நிலையில் தான் தயாரித்த ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் கே டி குஞ்சுமோன் ஈடுபட்டுள்ளார்.

ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள்.

உலகமே கொண்டாடிய பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் M.M.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இப்பொழுது, பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் S.S.ராஜ்மௌலியின் RRR படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலை பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

விரைவில் இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button