
டாப் ஹீரோ நடிக்கும் படத்தின் வசூல் நிலவரத்தை வைத்தே அவரது அடுத்த படத்தின் பிரம்மாண்டம் இருக்கும்.
அதற்கேற்ப படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் இருக்கும்.
ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் படங்களுக்கு வசூல் அதிகம் இருப்பதால் இவர்கள் நடிக்கும் படத்திற்கு கோடிகளை இறைக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக உள்ளனர்.
தற்போது இவர்கள் வரிசையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணனும் இணைந்திருக்கிறார் எனலாம்.
இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஒரு பாடலுக்கு 10 கோடி ரூபாய் செலவழித்துள்ளார்களாம்.
ஒரு பாடலுக்கே இவ்வளவுன்னா படத்தின் பட்ஜெட் என்னவாக இருக்கும் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாம். ஆக இனி பிரம்மாண்ட படங்களுக்கு சரவணின் படங்கள் பெரும் சவாலாக இருக்கும் போல.
இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
கீர்த்திகா திவாரி நாயகியாக நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
இவர்களுடன் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Legend Saravana Stores Arul debut movie budget updates





