
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் “மாமனிதன்”.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
இப்படம், சில தினங்களுக்கு முன் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று, இன்று வரை அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது.
ஆஹா ஓடிடி’யில் படம் வெளியாகி வெற்றியானதை தொடர்ந்து வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், ஆஹாவின் வணிக தலைவர் சிதம்பரம்நடராஜன், தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தின் வெற்றியை இசைஞானி இளையராஜாவிற்கு சமர்ப்பணம் செய்வதாக மேடையில் அறிவித்தார்.