Spotlightதமிழ்நாடு

பொது வெளியில பேச நான் ஒத்தையா வாரேன் நீங்கள் தயாரா விஜய்? – கேள்விக்கனைகளை தொடுத்த மன்சூர் அலிகான்!

ஈரோடு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

அவர் கூறியதாவது,

பாஜக தீயசக்தி.
2014 இல் இருந்து E.V.M. வச்சு பதவியவிட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துறாங்களே கண்ணுக்கு தெரியலையா விஜய்!
இல்ல, எஜமான விசுவாசமா?

நீட்’ட யாரு கொண்டு வந்தா? தீய சக்தி பாஜாக இல்லயா விஜய்?

100 நாள் வேலை திட்டத்துல இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காம களவாணித்தனம் செய்யுற பிஜேபி தீய சக்தி இல்லயா விஜய்?
திருப்பரங்குன்றத்துல கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்ட கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பிஜேபி தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா விஜய்?

எல்லாப் பொதுத்துறையையும் வித்து ஏப்பம் விட்டுட்டு, இந்தியாவுக்குன்னு சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்கள பிச்சை காரங்களா தொங்கவிட்டுட்ட பிஜேபி தீய சக்தியா தெரியலயா விஜய்?

ஒரு சாமியாரால நடத்தப்படுற இண்டிகோ 1000 பிளைட் திடீர்னு கேன்சல் செய்யப்பட்டு, பயணிகள் லட்சக்கணக்கா அவதிப்பட்டு, உலகமே இந்தியாவை காறி துப்புச்சே, அப்ப பிஜேபி ஒரு தீய சக்தியா தெரியலயா மிஸ்டர் விஜய்?

S.I.R. அமுல் படுத்தி E.V.M மூலம், அயோக்கியத் தனம் பண்ணி, பீகார், மஹாராஷ்டிரா, ஹரியானா என்று தேர்தல் ஆணையரை அவங்க வீட்டு வேலைக்காரனா மாத்தி, அதுக்குனே, சட்டம் திருத்தம் செஞ்சு, மொள்ளமாறித்தனம் செஞ்சு, டெல்லியில உட்காந்து அம்பேத்கர், பெரியார் சிலைகள கூட உடைக்கனும்னு துடிக்கிற தீயசக்தி பிஜேபி’ன்னு உங்க அறிவுக்கு படலயா திருமிகு விஜய் அவர்களே!

இது மாதிரி 100 கேள்விகள் இருக்கு பொது வெளியில பேச நான். ஒத்தையா வாரேன் நீங்கள் தயாரா விஜய்?

நீங்க மனப்பாடம் பண்ணி. காச்சு மூச்சுண்ணு கத்தினாலும் நீங்க M.G.R அல்ல, அண்ணா அல்ல. சுயமா பிஜேபி’யால இறக்கி விடப்படாம சுயமா சார்ட்டட் Flight, Y பாதுகாப்பு, G பாதுகாப்பு இல்லாம மக்கள் தான் எனக்கு பாதுகாப்புன்னு வாங்க . தோள் கொடுப்பான் தோழன். பாவம். பச்சை புள்ளைங்க நிலா வ புடிக்க ஆசை படக்கூடாது. நீங்க நெறய படம் நடிக்கனும்! ‘ஜனநாயகன்’ சத்தியமா உங்க கடைசி படம் இல்ல. என்னா, உங்க முதல் படத்துல நடிச்ச நான் அது நடிக்கல . நான் நடிச்சிருந்தாத்தான் அது கடைசி படம். உங்களுக்கு நிறைய ரசிகை, ரசிகர்கள் இருக்காங்க… அவங்க நீங்க நல்லா டான்ஸ் ஆடி நடிக்கறதத்தான் விரும்புவாங்க! வாங்க சீமான் ஒரு பக்கம், நெஞ்சு வெடிக்க கத்தறது பத்தாதுண்ணு நீங்க வேற நெஞ்சு… புடைக்க உதரவிதானத்துல இருந்து கத்தாதீங்க! நிறைய டைரக்டர்களுக்கு உங்க கால் சீட் தேவைப்படுது. பிஜேபியையும், மதவாதத்தையும் ஒழிக்க முதல்ல வாங்க! தூய சக்தி தமிழக மக்கள் தான். அவங்க முடிவு. அதிரடியா இருக்கும் பெண்கள் பாதுகாப்பு நிதிஷ் குமார். C.M. பர்தாவ தூக்கி பாத்தானே! அங்க கேக்க மாட்ட?
சட்டம் ஒழுங்குனா என்ன விலைன்னு கேக்குதே மோடி அரசு. அங்க உங்க Flight ல ஒருக்கா போய் பாத்துட்டு வாங்க என் அன்புத் தம்பி விஜய் அவர்களே! 250 நாட்டுக்கு நம்ம Sorry Sorry உங்க பிரதமர் மோடி போனாரே அது அதானி etc கம்பெனிக்கு வியாபார ஒப்பந்தம் போடத்தான்கிறது கூட தெரியாத நல்ல சக்தியா அப்பாவியா இருக்காதப்பா விஜய்!

நன்றி! அடுத்த படத்துல சந்திப்போம். அதுலயாவது நான் கேட்ட மாதிரி
அந்த Heroin கூட… ரேப் சீன் குடுப்பா. ப்ளீஸ் பா! மத்தபடி நீங்களே டூயட் பாடிக்கங்க! உங்க ரசிகர்கள் சார்பா தான் சத்தியமா கொப்புறான சத்தியமா இந்த வேண்டுகோள். என்னா நீங்க நடிக்காட்டி உங்க ரசிகர்கள் செத்து போயிருவாங்க! அவ்வளவு உயிர் உம் மேல வச்சுருக்காங்க. என் பசங்களும் தான். என் ஜூலை ஹா பொண்ணு உங்களோட ஃபேன். லியோ ல எடுத்த Still கூட யாரும் இதுவரைக்கும் அனுப்பலயாம். அது கூட அனுப்ப முடியலயான்னு கேக்குறாங்க. சரி உடம்ப பாத்துக்குங்க. என்னா, நான் இங்க Fit. அங்க நீங்க கத்தி மாதிரி இருக்கனும். நன்றி.

நாளைய தீர்ப்பு …..
பிஜேபி கையில! “ என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button