Spotlightசினிமா

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’! டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜூன்’, ‘மதுரம்’ படங்களை இயக்கிய அஹம்மது கபீர் இயக்கியுள்ள இப்படம், காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் பழைய நினைவுகளை மையமாகக் கொண்ட ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடரை இயக்கிய அஹம்மது கபீரின் இப்படம், காதல் மற்றும் நகைச்சுவையுடன் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடும் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button