Spotlightசினிமா

மாஸ்டர் சிறப்புக்காட்சி; அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கிறது மாஸ்டர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது..

சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தினை வரும் பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்நேரம், கொரோனாவின் தாக்கம் சற்று குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே நிரந்தரமானது; வேறு இயக்கம் தொடங்குவது அவரவர் விருப்பம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close