Spotlightதமிழ்நாடு

கொரோனாவை வெல்வோம்… இயக்குனர் வசந்தபாலனின் வித்தியாசமான முயற்சி!

லகமெங்கும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் நாளை (22/03/20) ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்த இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் வசந்தபாலன் வித்தியாசமான ஒரு முயற்சி எடுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில்,

”தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் ?

அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது.

வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப்பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு : 22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.
ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம்.

பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு.
ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.

தலைப்பு : கொரோனோவை வெல்வோம்” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button