Spotlightசினிமா

பாலியல் குற்றங்களுக்கு சாட்டையடி கொடுக்க வரும் “மெய்ப்பட செய்”

ர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது.

பார்வை ஒன்றே போதுமே’. ’பெரியண்ணா’. ’சாப்ளின்’ போன்ற படங்களில் பாடல்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இசையமைப்பாளர் பரணி. அவரது இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

சமூக அக்கறையுடன் பாலியல் குற்றவாளிகளை களையெடுக்க ஒரு தீர்வாக கதை அமைத்து திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குநர் வேலன் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் இந்தப் படத்திற்கு பக்கபலமாக கதை ஓட்டத்தோடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’மிருதன்’, ’சித்திரம் பேசுதடி-2’, ’ஆடாம ஜெயிச்சோமடா’. ’பரமகுரு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்த கே.ஜே.வெங்கட்ரமணன் இப்படத்திற்கு சிறப்பான படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.மக்கள் தொடர்பு தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு இருவரும் பணியாற்றி உள்ளனர்.

‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close