Spotlightசினிமா

பொங்கல் விடுமுறையை குறி வைத்த “மேரி கிறிஸ்மஸ்”!

 

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது என மகிழ்ச்சியுடன் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.‌

‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் மிகுந்த ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்கும் படைப்பாகும். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் திரையுலக பிரபலங்கள் பலரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ பட போஸ்டரை பாராட்டினர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

“ஃபார்ஸி” என்ற இந்தி சீரிஸில் முத்திரை பதிக்கும் வகையில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தி திரைப்படம் என்பதால் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படைப்பைக் கண்டு ரசிக்க.. ஆட ..பாட.. சிலிர்க்க.. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். விஜய் சேதுபதி -கத்ரீனா கைஃப் இணைந்து நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button