Spotlightசினிமா

பெண்கள் பேராதரவுடன் வெற்றிநடை போடும் ‘மூக்குத்தி அம்மன் 2’ !

Mookuthi Amman 2 திரைப்படம் பெண்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வருவதாகப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

பக்தி, அமானுஷ்யம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் நடிப்பு மற்றும் சுந்தர் சி இயக்கம் ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் பக்தி சார்ந்த காட்சிகளும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

பெண் ரசிகர்களின் ஆதரவை முன்னிலைப்படுத்தி இப்படம் திரையரங்குகளில் குடும்பமாக வந்து இப்படத்தை கண்டுகளித்து செல்கின்றனர்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button