Spotlightசினிமா

இராஜ ராஜ சோழனாக வீர நடை போட்ட ஆதேஷ் பாலா.. அதிர்ந்து போன அரங்கம்!!

சினிமாத்துறையின் அடிப்படை நாடியே நாடகத்துறை தான். முன்பெல்லாம், சினிமாவிற்குள் வரவேண்டும் என்றால் நாடகத்துறையில் இருந்த அனுபவம் இருக்கிறதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கக்கூடும்..

ஆனால், காலப்போக்கில் வந்தவர்கள் போனவர்கள் எல்லாரும் நானும் நடிகன் தான் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டது தமிழ் சினிமா.

இருந்தாலும், நாடகத்தை பார்ப்பவர்களும், அதனை ரசிப்பவர்களும், அதனை ஏற்பவர்களும் இன்றளவும் அதிகமாகவே இருந்து வருகின்றனர்.

சினிமாவில் சிறு, சிறு காட்சிகளாக எடுத்து அதை வெட்டி, ஒட்டி என பல வேலைகளை செய்வார்கள். ஆனால், நாடகத்தில் அப்படியெல்லாம் செய்து விட முடியாது.

நாடகம் 2 மணி நேரமோ 3 மணி நேரமோ, பிழை இல்லாமல் காட்சிக்கு தொய்வை ஏற்படுத்தாமல் தொடர்ச்சியாக நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும் நாடகமானது பார்க்கும் ரசிகர்களை திருப்திபடுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

இப்படியாக இருக்கும் நாடக உலகில், தனி முத்திரை பதித்தது போல மாமன்னர் இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

நாடகத்தின் பெயர் : மும்முடி சோழன்.

ஒரு திரைப்படத்தை மேடையில் கண்டது போல் அரங்கேற்றமாகியிருக்கிறது மன்னர் இராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு.

இராஜராஜ சோழன் வாழ்க்கையை சொல்லும் ‘மும்முடி சோழன்’ நாடகம் இது.

இதில் இராஜேந்திர சோழனாக நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் நடிகரான ஆதேஷ் பாலா.

ஒரு மாபெரும் வீரனாக அறியப்பட்ட இராஜேந்திர சோழனை, கண்முன்னே கண்டது போன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

ஒரு பிரமாண்ட தோற்றத்தோடும், கம்பீர நடையோடும் வசன உச்சரிப்பிலும் நாடகத்தை பார்த்தவர்களிடம் தனிக்கவனத்தை பெற்றிருந்திருக்கிறார் ஆதேஷ் பாலா. இவருடைய காட்சிகளிலெல்லாம் அரங்கமே அதிரும் அளவிற்கு அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திருக்கின்றனர்.

இந்த நாடகத்தில் மொத்தமாக கிட்டத்தட்ட 38 காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகம் ஜூன் 14 நேற்று மாலை சென்னை இராஜா அண்னாமலை மன்றத்தில் மிக பிரம்மாண்டமாய் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடை பெற்ற இந்த நாடகத்திற்கு தொழில் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்கள், தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள், அமைச்ச்சர் சேகர் பாபு அவர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செயலாளர்
விஜயா தாயன்பன், நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நெல்லை ஜெயந்தா, உலக தமிழ் வளச்சி கழக தலைவர் அவ்வை அருள், கே பி கே செல்வாராஜ், மருத்துவர் க மணிவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நாடகத்தை தயாரித்து வழங்கியது யோகஷாரம் அறக்கட்டளை நிறுவனர் தயாரிப்பாளர் A P வைத்தீஸ்வரன், இயக்கம் AS மணி, நாடக ஆக்கம், வசனம்  தஞ்சை  RK

Facebook Comments

Related Articles

Back to top button