Spotlightசினிமாவிமர்சனங்கள்

N4 – விமர்சனம்

யக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரிலா, வினுஷா தேவி, அனுபமா குமார், அப்சல், வடிவுக்கரசி, அபிஷேக் ஷங்கர், அழகு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “என் 4”. மீண்டும் ஒரு வட சென்னை படமா என்று எண்ணிக்கொண்டே திரையரங்கிற்குள் சென்றால்…

கதைப்படி,

பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளாக இருந்தவர்களை வட சென்னையில் வசித்து வரும் வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். அவர்கள் தான் மைக்கேல், கேப்ரிலா, வினுஷா, அப்சல்.

மீன் சுமக்கும் தொழில் செய்து வருகின்றனர் மைக்கேலும், அப்சலும். மீன் வியாபாரம் செய்து வருகிறார் கேப்ரிலா.

இவர்களில் மைக்கேலும் கேப்ரிலாவும் ஒரு காதல் ஜோடியாகவும் அப்சலும் வினுஷாவும் ஒரு காதல் ஜோடிகளாகவும் வருகின்றனர்.

ஒருநாள் இரவில் இவர்கள் நால்வரும் செல்லும் போது எங்கிருந்தோ வரும் துப்பாக்கி குண்டு வினுஷாவின் மீது பாய்ந்து விடுகிறது.

உயிருக்கு ஆபத்தமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் வினுஷா.

இந்த வழக்கை அப்பகுதியில் நேர்மையான இன்ஸ்பெக்டராக வரும் அனுபமா குமார் விசாரணை நடத்துகிறார்.

யார் வினுஷாவை சுட்டது..?? குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா.? தனது நேர்மையை அனுபமா தொடர்ந்தாரா .? என்பதே கதையின் மீதிக் கதை.

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கான கேரக்டரை புரிந்து கொண்டு அக்கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். அதில், கேப்ரில்லாவின் நடிப்பு அசுர நடிப்பாக கொடுத்திருந்தார்.

மற்ற படத்திலிருந்து சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் அனுபமா. வட சென்னை என்றால் இப்படித்தான் என்ற நெகடிவ் பிம்பத்தை இப்படத்தில் சற்று உடைத்திருக்கிறார் இயக்குனர். இன்னும் சற்று வலுவாகவே அதை செய்திருக்கலாம்.

மூத்த நடிகரான அழகு, ஒரு இடத்தில் தான் சம்பாதித்த பணத்தை எடுத்து மொத்தமாக கொடுக்கும் போது வரும் காட்சியில் கண்களின் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். வடிவுக்கரசி, தனது அனுபவ நடிப்பைக் காட்சிக்கு காட்சி கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

தெளிவான ஒரு திரைக்கதையை கொடுக்க சற்று தடுமாறியிருக்கிறார் இயக்குனர். பெரிதான ஒரு ஈர்ப்பை இப்படம் கொடுக்கவில்லை என்றாலும், காட்சிகளை அழகூற கூறியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

ஆங்காங்கே எட்டிப் பார்த்த கேப்ரிலாவின் ஓவர் ஆக்டிங்கையும் சற்று சரிசெய்திருக்கலாம்.

பால சுப்ரமணியன் அவர்களின் இசையில் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

N4 – வட சென்னையின் அழகு காட்சிகளை காண ஒருமுறை விசிட் அடிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button