இயக்குனர் பாலா படம் என்றாலே வேறு எதுவும் பேசாமல் திரையரங்கிற்கு மட்டும் படையெடுத்து சென்று பார்க்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே அவருக்கு உண்டு. தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு நாச்சியார் படத்தை இயக்கியிருக்கும் பாலாவிற்கு இது வெற்றியா..?? இல்லையா ..?? என்பதை பார்த்து விடலாம்.
படத்தின் ஆரம்பத்தில் இவானா கர்ப்பிணி பெண்ணாக இரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்க, இரண்டு பேர் வழுக்கட்டாயமாக அவரை காரில் கொண்டு செல்ல, போலீஸ் அதிகாரியாக வரும் ஜோதிகா அவரை துரத்திச் சென்று பிடிக்கிறார்.
அவர்களிடம் இருந்து இவானாவை அழைத்துச் செல்கிறார் ஜோதிகா. இது ஒருபுறம் நடக்க, இவானாவை சிறுவயதிலேயே கற்பழித்துவிட்டதாக ஜி வி பிரகாஷை விரட்டிச் சென்று பிடிக்கிறது போலீஸ்.
ஜி வி பிரகாஷ் ஜெயிலில் இவானாவுடனான தனது காதலை ப்ளாஷ் பேக்காக சொல்ல, மறுபுறம் இவானாவும் தனது காதல் கதையை ஜோதிகாவிடம் கூற கதை நகர்கிறது.
ஒரு கட்டத்தில் இவானாவிற்கு குழந்தை பிறக்க, அந்த குழந்தை ஜி வி பிரகாஷ்க்கு பிறந்த குழந்தை என்று டிஎன்ஏ மூலம் தெரிய வருகிறது. பிறகு யார் தான் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை…
பல படத்திற்கு பிறகு ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் காணலாம். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஜோதிகாவின் கேரக்டரை பிரதிபலிக்க வைத்திருப்பது பாலாவின் ஸ்டைல். இவானாவுடனான காட்சிகளில் ஜோதிகவின் இரக்கக் குணமாக இருக்கட்டும், இன்வஸ்டிகேஷன் நடக்கும் இடத்தில் கோபத்தை வாரி இறைக்கும் காட்சிகளாக இருக்கட்டும் ஜோதிகாவின் மிரட்டல் மட்டுமே.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் தமிழ் சினிமாவில் தனது நடிப்பை ஆரம்பித்து பல படங்களில் ஜி வி பிரகாஷ் நடித்தாலும், இதுவே அவருடைய முதல் படம் போன்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் பாலா. சென்னை லோக்கல் பையனாக தனது கேரக்டரை மிகவும் தெளிவாக செய்து முடித்திருக்கிறார்.
இவானா அறிமுகமான தனது முதல் படத்திலேயே கேரக்டரோடு பொருந்திச் சென்றிருக்கிறார். பாலாவின் படங்களில் நடிப்பிற்கு பஞ்சம் இருக்காது இல்லையா..?? இவனாவின் கேரக்டரில் தெரிந்து கொள்ளலாம். இவானாவின் சென்னை லேங்குவேஜ் செம…
மற்ற தமிழ் குமரன், ராக் லைன் வெங்கடேஷ், ஜி வி யின் பாட்டியாக வருபவர், என அனைத்து கேரக்டர்களும் பேசும்படியாக வைத்திருப்பது சூப்பர்.
என்றும் ராஜா ராஜாதான். இளையராஜாவின் இசை கதைக்கு சரியான பக்க பலம். ஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையின் அனைத்து இடங்களையும் அழகாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
நாச்சியார் – பாலாவின் ஹிட் படங்களின் வரிசையில் இந்த நாச்சியாருக்கும் ஒரு இடம் உண்டு