Spotlightதமிழ்நாடு

2000 அம்மா மினி கிளினிக்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்!!

ம்மா மினிகிளினிக் முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

இந்த மினி கிளினிக் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மினி கிளினிக்குகள் இயங்கும்.

மேலும், அடிப்படை சிகிச்சைகள், உடல் பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசம்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியபோது, ‘ நாட்டிலேயே தமிழகம் சுகாதார பணிகளில் முன்னிலை வகிக்கிறது.

மருத்துவத்துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

16 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது அம்மாவின் அரசு.

அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்புக்கு இடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button