விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கா செந்தில் வேலன் தயாரித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம் தான் “Production No : 1”.
இப்படத்தினை குணா சுப்ரமணியம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு மணி பெருமாள் செய்திருக்கிறார். இசையமைத்து வருகிறார் சரண்குமார்
நட்டி, நிஷாந்த் ரஸ்சோ, சிவன்யா, நிழல்கள் ரவி, ஆதேஷ் பாலா, ஜீவா ரவி, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம், தமிழ் சினிமாவில் தனி முத்திரையை பதிக்கும் என்கிறார் இயக்குனர்.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா. சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், இப்படத்தின் மீது அலாதிய நம்பிக்கை வைத்திருக்கிறார்.
எப்போதும் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் தனிச் சித்திரமாக ஒளி கொடுத்து வரும் ஆதேஷ் பாலா, இப்படம் தனக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்.
நட்டி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களோடு நடித்த அனுபவம் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார் ஆதேஷ் பாலா.