
சில தினங்களுக்கு முன் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். மேலும், அக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்து அவர்களுக்கு இழப்பீடும் கொடுத்தார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அரக்கோணம் படுகொலை சாதி கொலை இல்லை எனவும், திருமாவளவன் தான் இதை சாதி பிரச்சனையாக மாற்றுகிறார் என்றும் படித்த இளைஞர்கள் யாரும் திருமாவின் பின் நிற்பதில்லை எனவும் கூறியிருந்தார்.
அன்புமணியின் இப்பேச்சுக்கு கண்டனம் வழுத்தது. ட்விட்டரில் அவருக்கு எதிராக களமிறங்கினர். படித்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உலகம் முழுவதும் இருந்து #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டாக்குகளை பதிவிட்டனர்.
இதற்கு திருமாவளன் தன்னோடு துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
'நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த_நன்றி.
மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி. pic.twitter.com/N1wuVHOhXZ
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 11, 2021