சற்றுமுன் தமிழக ஆளுநர் சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால்
”தமிழக ஆளுநராக பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவு செய்துள்ளேன்.
மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது.
விசாரணை அதிகாரி சந்தானம் சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும் ; ஆனால் தற்போது அதற்கான தேவை இல்லை’ என்று கூறினார்.
Facebook Comments