
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், நட்டி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வெற்றிகரமாக 3 வது வாரமாக இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இச்செய்தியை தனுஷே அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments





