
இயக்கம்: சுகவனம்
நடிகர்கள்: பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன்
ஒளிப்பதிவு: விமல்
இசை: என் டி ஆர் (நடராஜன் சங்கரன்)
தயாரிப்பு: கருப்பசாமி
இணைத் தயாரிப்பு: அமராவதி
கதைப்படி,
சிறுவயதில் பரோட்டா முருகேசனின் மகன் கிணற்றில் தவறி விழ, உயிருக்கு போராடுகிறார். ஆட்டுக்குட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு ஒண்டிமுனியா இந்த ஆட்டை உனக்கு பலி கொடுக்கிறேன் என் மகனின் உயிரை திரும்பிக் கொடு என்றதும் மகன் கண் விழிக்கிறார்.
அன்றிலிருந்து அந்த ஆட்டுக்குட்டியை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் முருகேசன். ஒண்டி முனிக்காக அந்த ஆடு வளர்க்கப்படுவது அந்த கிராமத்திற்கே தெரியும்.
வருடங்களும் உருண்டோட, ஆட்டை ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க நினைக்கிறார் முருகேசன். பண்ணாடி (பண்ணையார்) இருவருக்குள் இருக்கும் சண்டையால் ஒண்டிமுனியை கிராம மக்கள் வழிபட விடாதபடி செய்து வைத்திருக்கின்றனர் இருவரும்.
முருகேசனும் இரு பண்ணாடியிடமும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறார் ஆனால், அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இரு பண்ணாடிகளில் ஒருவராக வரும் கார்த்திகேசன், திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதற்காக ஒண்டிமுனியை வழிபட சம்மதிக்கிறார்.
அது என்ன திட்டம்.? முருகேசனின் நீண்ட வருட கனவான ஆட்டை ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க முடிந்ததா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தன் தோள் மீது தாங்கிச் சென்றிருக்கிறார் பரோட்டா முருகேசன். கிராமத்து வாழ்வியலை நம் கண்முன்னே அப்படியே கொண்டு வந்துவிட்டார் முருகேசன். கிடா மீது வைத்திருக்கும் பாசத்தை, அவர் அதனை தேடும் போது வெளிப்படுத்திவிட்டார். ஒண்டிமுனி மீது வைத்திருக்கும் பக்தி, தனது குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பு என கண்களாலே பல காட்சிகளை கடத்திச் சென்று நம்மை அசர வைத்திருக்கிறார் முருகேசன்.
மேலும், படத்தில் நடித்த மகளாக சித்ரா நடராஜன், மருமகனாக நடித்திருந்த சேனாபதி, முருகன், பண்ணாடியாக நடித்திருந்த கார்த்திகேசன், விஜயன் மற்றும் விகடன் உள்ளிட்ட அனைவருமே படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தனர்.

பைக் இருந்தால் தான் காதலிப்பேன் என்ற கதாநாயகியின் கருத்தை தவிர்த்திருந்திருக்கலாம்.. கதாநாயகனின் காட்சிகளையும் சற்று கவனித்திருந்திருக்கலாம்.
பரோட்டா முருகேசனின் கதாபாத்திரத்தை பலப்படுத்திய இயக்குனர் ஹீரோ மற்றும் ஹீரோயினியின் கதாபாத்திரத்தையும் வலுப்படுத்தியிருந்திருக்கலாம்.,
காட்சிப்பதிவு ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவில் அப்படியான ஒரு தெளிவு.. பின்னணி இசையில் கதையோடு நம்மையும் சேர்ந்து பயணப்பட வைத்துவிட்டார்கள்.
விவசாயிகள் அனைவரும் பேசிக் கொண்டே நடந்து செல்லும் பல வருட அரசியல், அப்ளாஷ்..
ஒண்டிமுனியும் நல்லபாடனும் – வாழ்வியல்





