Spotlightசினிமா

”ஒன்லி ஒன் சூப்பர் ஒன்”.. ‘பேட்ட’ கலெக்‌ஷனில் மாஸ் காட்டிய ரஜினி!

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவானது ‘பேட்ட’. கடந்த 10 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தது.

படம் வெளியானது முதல் நல்ல ஒரு வரவேற்பை பெற்று திரையரங்குகளின் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது.

நீண்ட நாள் கழித்து சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், மாஸ், ஆக்ஷன் என அனைத்தையும் இப்படத்தில் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

இது ஒருபுறம் இருக்க பாக்ஸ் ஆபிஸில் தான் எப்போதும் கிங் என சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் நிருப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அதன் படி பேட்ட திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பேட்ட படம் மட்டுமின்றி சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான எந்திரன், 2.0 படங்களும் தமிழ் நாட்டில் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button