Spotlightசினிமா

தனக்காக பேசிய ரசிகர்களுக்கு ஒன்றும் செய்யாதவர் தான் கமல் – வெளுத்து வாங்கிய கே ராஜன்!

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’.
குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,
இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர் நடித்துள்ளார்கள்.

இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையாமாக கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இபடத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் அழகன் மணி பேசியதாவது…

என் மகன் இப்படத்தின் தயாரிப்பாளர் நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்து இந்த துறைக்கு வந்தவன். நான் போட்டு வந்த பாதையை என் மகன் பின்பற்றுவான் என நம்புகிறேன். நான் தலைசிறந்த படைப்புகளையே தயாரித்துள்ளேன். என் மகன் தயாரித்துள்ள இப்படமும் நல்ல படைப்பாக இருக்கும். இயக்குநர் இராஜமோகன் என் செல்லபிள்ளை, முழு சுதந்திரம் தந்து இப்படத்தை இயக்க சொன்னேன் நன்றாக இயக்கியுள்ளார்.

உங்களில் இருந்து வந்தவன் நான் ஆதலால் இப்படத்திற்கு நீங்கள் உங்கள் ஆதரவை முழுமையாக தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் திரைத்துறையில் இருந்த காலத்தில் கதைக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்போம்.பேசி பேசி திரைக்கதை தயாராக ஒரு வருடம் ஆகும். அடுத்ததாக என் தம்பி ஒரு படத்தை என் அலுவலகத்தில் அப்படி உருவாக்கி வருகிறார். பல நல்ல படைப்புகள் தொடர்ந்து வரும் இங்கு இப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. என்று கூறினார்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது…

இயக்குநர் இராஜமோகனின் ‘அட்றஸ்’ என்னவென்று சொல்லப்போகும் படம். என்னிடம் ஏய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அவர் பல வருடங்களாக இந்த கதையை செய்து வந்தார். ஒரு முறை என்னிடம் சொன்னார். அப்போது நான் நடிப்பதாக இல்லை. அந்த கதை என்னை மிகவும் பாதித்தது பல காலமாக அந்தப்படம் எப்போது எடுக்கிறீர்கள் என கேட்பேன், பின் அழகன் தமிழ்மணி ஐயா எடுக்கிறார்கள் என்றார்கள். சந்தோசமாக இருந்தது. என்னை ஒரு கேரக்டர் இருக்கிறது நடியுங்கள் என கேட்டார்கள் மகிழ்ச்சியோடு நடித்தேன். இப்படத்தில் ஒரு வசனம் வரும்,
“ஆதார் உனக்கு அட்ரஸ்.. ஆனால் அது எனக்கு வாழ்க்கை..”

ஒப்படி முழுப்படத்தை ஆதார் கார்டை வச்சு மிகப்பிரமாதமாக கதை அமைத்துள்ளார். அழகன் தமிழ்மணி ஐயாவின் மகன் அஜய் கிருஷ்ணா மிக அற்புதமாக படத்தை ஒருங்கிணைத்தார். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….

நான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். டிராஃபிக் ஜாம். இப்படத்தின் பாடல் நன்றாக இருக்கிறது, டிரெய்லர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள் என் கருத்து என்னவென்றால் என் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் பின் டெக்னிஷுயன், நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் எல்லாம் தலைகீழாக இருக்கிறது.

தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது மக்கள் கூட்டமாக வருகிறார்கள். சினிமாவில் தயாரிப்பாளர்கள் எங்க ஆட்கள் சரியில்லை, பின்னால் இழுப்பதில் குறியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது.

தமிழ் சினிமா பற்றி நடிகர் பற்றி யாரைப் பற்றியும் பேசவில்லை. பேசினால் பிரச்சனை வருகிறது. ரசிகனை விட்டு மிரட்டுகிறார்கள். ரசிகனை விட்டு மிரட்டினால் அவ்வளவுதான். கமல் ரசிகர்கள் மிரட்டியபோது அவர்களை ஜெயிலுக்கு அனுப்பினேன். ஆனால் கடைசியில் அவர்களை நான் தான் பெயில் எடுத்தேன். கைதானவர்கள் ஒவ்வொருவரும் ஏழைகள். அவர்களை தூண்டிவிட்டவர் வரவில்லை. கமல் என்னை திட்ட ஆள் ரெடி செய்து அனுப்பிவிட்டு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் உலக நாயகனால் உள்ளே போனார்கள். அந்த கேஸ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.

தர்மம் செய்யுங்கள். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தம்பி இறந்து விட்டார் அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்துள்ளார் ஆனால் இந்த தம்பி அதை தொடர்ந்து நடத்தியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த தம்பி தான் இல்லையென்றால் யார் நடத்துவார்கள் என 8 கோடி ரூபாய் பேங்கில் போட்டு வைத்து, தான் இல்லாவிட்டாலும் இது தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார் அது தான் புண்ணியம். இங்கு யார் செய்கிறார்கள். இந்தப்படம் அட்ரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button