Spotlightசினிமா

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் ‘ராதாரவி’!

பொதுவாக மகனை கதாநாயகனாக்க தந்தை தான் இயக்குனராகவோ தயாரிப்பாளராகவோ மாறுவார்கள். ஆனால் வித்தியாசமாக தந்தையின் நடிப்பு கனவை நிறைவேற்ற மகன் இயக்குனராக மாறி இருக்கிறார். அரளி என்னும் படத்தை தனது தந்தை அருணாச்சலத்தை கதாநாயகனாக்கி இயக்கி தயாரித்து உள்ளார் இயக்குனர் சுப்பாராஜ்.

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மைய்யமாக கொண்டு நகர்கிறது அரளி. இப்படத்தில் நாயகனாக ​மது சூதன், நாயகியாக மஞ்சுளா​ ரதோட்​ இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை ​அருணாச்சலம் அவர்களும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார்.​

மேலும்​ ​காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா​ ஆகியோரும் நடித்துள்ளனர் . படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குனரின் குணத்தையும், உழைப்பையும் ​பாராட்டிய ராதாரவி தான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளதாகவும்​,​ அதில் இயக்குனராக அரளி பட இயக்குனரான சுப்பாராஜுவையே ஒப்பந்தம் செய்வேன் என்று மேடையிலேயே உறுதி அளித்தார்.

பெற்றோரை போற்ற வேண்டும் என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுப்பாராஜூவை​ நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்கள்​.

Facebook Comments

Related Articles

Back to top button