Spotlightசினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்மவீட்டுப் பிள்ளை’!

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

இப்படத்தினை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிரவ் ஷா ஒளிப்பதிவில் இமானின் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளங்களே உள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று நேரத்திற்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தினை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button