கடந்த வாரம் ரஜினி நடிப்பில் உருவான காலா வெளியானது. ரஞ்சித் இயக்கத்தில்உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரஜினி, தான் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தை இந்த ஆண்டு இறுதியிலேயே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் ஆங்கில படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் மாஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
2.0 இந்த ஆண்டு இறுதி, முடிந்தால் தீபாவளிக்கே வெளியிட ரஜினி விரும்புகிறார். அப்படி இந்த ஆண்டு இறுதியில் என்றால் படத்துக்கான விளம்பர வேலைகள் மூன்று மாதத்துக்கு முன்பு அதாவது ஜுலை, ஆகஸ்டிலேயே தொடங்கப்படலாம். ரஜினி அடுத்து கார்த்தி சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.