
இயக்கம்: ஜெயவேல்
நடிகர்கள்: சௌந்தர் ராஜா, தீனா, வேல ராமமூர்த்தி, பூவையார், அஜய், அர்ஜுன், ஜாவா சுந்தரேசன்
தயாரிப்பு: அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ்
இசை : டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்
ஒளிப்பதிவு : எல்.கே.விஜய்
பூவையார், அஜய், அர்ஜுன் மூவரும் நண்பர்கள். சிறுவன் ஒருவனை கடத்தி அவனை கொலை செய்து விடுகின்றனர் இந்த மூவரும்.
இறந்து போன சிறுவனின் தாத்தாவான வேலா ராமமூர்த்தி, தனது பேரனின் கொலைக்கு காரணமானவர்களை பிடிக்குமாறு போலீஸிடம் புகார் அளிக்கிறார்.
வேல ராமமூர்த்திக்கு நெருக்கமானவரான போலீஸ் தீனா, மூன்று சிறுவர்களை என்கெளண்டர் செய்ய தயாராகிறார். அதன்பிறகு இவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின்மீதிக் கதை.
கதையில் முதலில் சிறுவர்களை வைத்து ஏன் இப்படியான கதையை இயக்குனர் எடுத்தார் என்று படத்தின் மீது வெறுப்பை வர வைத்தாலும், இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட படத்தின் நோக்கம் இந்த தலைமுறைகளுக்கு சரியான ஒரு பாடமாக இப்படம் தென்படுகிறது.
சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் ஆழமாகவும் சரியாகவும் கூறி படம் பார்ப்பவர்களின் பாராட்டினை அள்ளியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் நடித்த அனைவருமே படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே இருந்திருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி, படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் செளந்தரராஜா, தனது கேரக்டரை மிகக் கச்சிதமாகவே செய்து முடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் தீனா, வேல ராமமூர்த்தி முழு வில்லன்களாகவே மாறி இருக்கிறார்கள்.
நல்லதொரு மெசேஜை கூறிய இயக்குனர், சிறுவர்களை வைத்து வரும் வன்முறைகளை சற்று குறைத்திருக்கலாம் என்று கூற வைத்திருக்கிறார்.
ராம் அப்துல்லா ஆண்டனி – மெசேஜ் தான்..





