Spotlightசினிமா

ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்த ‘ஜகமே தந்திரம்’ படக்குழு… அப்செட்டில் தனுஷ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி இருக்கிறது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது இப்படம்.

Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

படத்தினை ஓடிடி’யில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்ததை அடுத்து ரசிகர்களிடம் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியது.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷின் படம் ஓடிடி’யில் வெளியாவதை யாரும் விரும்பவில்லை.

இப்படத்தை அனைவரும் போலவே தானும் திரையரங்கில் பார்க்க ஆசைப்படுவதாக தனுஷும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஜகமே தந்திரம் படத்தை NETFlix’ல் வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

வியாபார நோக்கத்திற்காக மட்டுமே படத்தின் குழு உள்ளதாகவும் ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் இதுவரை இப்படத்தின் டீசரை தனது ட்விட்டரை பக்கத்தில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button